சம்பந்தனை சந்திக்க யாழிலிருந்து கொழும்பு விரைகிறது விசேட குழு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் என்னவகையான முடிவை எடுக்கவேண்டுமென்பது தொடர்பில் சம்பந்தனுடன் இன்று பேச்சு நடத்த விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றுள்ளது.

மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கருத்துருவாக்கிகள் ,அரசியல் எழுத்தாளர்களை உள்ளடக்கிய குழுவே இவ்வாறு கொழும்புக்கு சென்றுள்ளனர்.

முன்னதாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ளது.

இந் நிலையில் – மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரும் சாதகமான பிரதிபலிப்பை இதுவிடயத்தில் வெளியிடவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழர் சுயாதிபத்தியம் மற்றும் தமிழர் தேசத்தின் நலன் உட்பட்ட விடயங்களை தமிழர் அரசியல் தரப்புகளுடன் பேச இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இன்று சம்பந்தனை சந்திக்கவுள்ள பிரதிநிதிகள் குழுவினர், தமிழரின் இந்த நெடுங்கால பிரச்சினைகளை உலகுக்கு மீண்டும் வலியுறுத்தவும் , சிங்கள தேசத்திற்கும் சிங்கள தலைவர்களுக்கும் தமிழரின் நிலைப்பாட்டை சொல்லும் வகையில் தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சம்பந்தனை வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேசமயம் ஒருவேளை சம்பந்தன் அதற்கு இணங்காத பட்சத்தில் , ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரித்து ஒட்டுமொத்த தமிழினத்தின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதா என்பது பற்றிய ஆலோசனையையும் குழு முன்வைக்கவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *