யாழில் மீண்டும் திடீர் சோதனை சாவடிகள்! நுளையும் முக்கிய புள்ளி?

ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.

அத்தோடு கண்டி நெடுஞ்சாலையில் , நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.

கடந்த ஏப்பிரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ , பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை , யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவை மன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்குமாறு மன்று அழைப்பாணை விடுத்திருந்தது.

கோட்டாபய யாழ்ப்பாணம் செல்வது பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்று கட்டளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வேளை கோட்டாபாய யாழ்ப்பாணம் செல்லக் கூடும் என கூறப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *