இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடு திரும்பியவர்களிற்கு யாழ். மாவட்டத்தில் வீடுகள்

இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடு திரும்பிய ஏதிலிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த வீடுகள் யாழ். மாவட்டத்தின் கலுண்டாய் மற்றும் உடுவில் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் கலுண்டாய் வீட்டுத் திட்டத்தில் 48 வீடுகளும், உடுவில் பகுதியில் 55 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளனன்.

குறித்த வீடுகளின் உட்கட்டுமான வசதிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்படுவதாகவும், அண்மையில் இந்த வீடுகள் தொடர்பில் ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை யாழ். மாவட்டத்தில் 2,955 வீடுகள் கட்டப்படுவதாகவும், அதில் 1,500 வீடுகளின் நிர்மாண பணிகளே முடிவடைந்துள்ளதாக கூறிய அவர் இந்த வீடுகள் வெகு விரைவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வீடுகளிற்காக 103 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *