வெளிநாட்டில் இரண்டு பிள்ளைகள்! யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

யாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததை அடுத்து உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் வயதான பெண்மணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்புத் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த வயதான தாயின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் அவர் எந்தவித துணையுமின்றி தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *