இந்த இழி செயல்கள் நடக்கக் காரணம் கூட்டமைப்பே- சாடும் டக்ளஸ்

முல்லைத்தீவு ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார்.

இலங்கை ஒரு சமயத்திற்கான நாடு அல்ல என்றும், அது மதசார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனக்கூறிய அவர் இதை தாம் புதிய அரசியல் சீர்திருத்த வரைபிலும் வலியுறுத்தியிருகின்றதாகவும் கூறியுள்ளார்.

எனினும் இலங்கைத் தீவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பௌத்த நாடாக புதிய அரசியல் வரைபில் ஏற்றுக்கொண்டுள்ளதன் விளைவாகவே இன்று இந்த இழிவு செய்யும் நிகழ்வுகள் நடந்தேறக் காரணமாக அமைந்திருக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்துடன் குறித்த சம்பவம் இன நல்லிணக்கத்திற்கு எதிரானதும் வன்மங்களையும் குரோதங்களையும் மீளவும் வளர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்திருந்தால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கும் இடமளித்திருக்க மாட்டோம் எனக்கூறிய அவர், இந்த சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதோடு, இது தொடர்பில் நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *