யாழிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலுக்காக 15 நிமிடங்களாக மூடப்பட்ட ரயில்வே கடவை!

வவுனியா நகசபை பூங்கா வீதியில் அமைந்துள்ள ரயில்வே பாதுகாப்பு கடவை, ரயில் வருவதற்கு முன்பாகவே இன்று காலை மற்றும் மாலை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டது.

இதனால் அவ்வீதியூடாக பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

குறித்த ரயில்வே பாதுகாப்பு கடவைக்கு அருகே 100 மீற்றர் தொலைவில் காணப்படும் ரயில்வே பாதுகாப்பு கடவை திறக்கப்பட்டிருந்த போதிலும் இப்பாதுகாப்பு கடவை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு கடவையில் கடமையாற்றும் ஊழியரிடம் வினாவிய போது,

எனது கட்டுப்பாட்டு அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ள ரயில் வருகை தரவிருந்தது.

இதன் காரணமாகவே 15 நிமிடங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கடவையினை மூடியதாக தெரிவித்தார்.

குறித்த பாதை 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தமையினால் அவ்வழியூடாக பயணித்த பல வாகனங்கள் மாற்றுப் பாதையூடாக தங்களது பயணத்தினை தொடர்ந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *