எழுக தமிழ் பேரணியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் மீது பாதணிகளை வீசி எறிந்த தாயார்- காரணம் என்ன..!

நேற்றைய தினம் யாழில் முன்னெடுக்கப்பட்டிருந்த எழுக தமிழ் நிகழ்வில் ஒரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஓர் தாய் தனது பிள்ளையை 31 ஆண்டுகளாக தேடிவருகிறார் . அந்த தாயாரின் மகன் யாழில் இந்திய ராணுவம் இங்கு நிலைகொண்டிருந்த காலத்திலேயே காணாமல் போயுள்ளார்.

உண்மையிலேயே மிகவும் வேதனைப்படவேண்டுய விடயதான் இது. அந்த தாய்க்கு எழுக தமிழ் பற்றி சரிவர தெரியவில்லை . ஏதோ காணாமல் போனோருக்கான ஆர்ப்பாட்டம் என்று கருதியே அவர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார் .

அங்கு நின்ற ஒருவர் அந்த தாயிடம் அம்மா உங்கள் மகன் எப்போது காணாமல் போனாரென கேட்டபோது 1988 இல் இந்திய ஆமி காலத்தில் தனது மகன் காணாமல் போயுள்ள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்த போக்கரப்போவாங்கள் மண்டையகுழு ஈபி கும்பல் தான் தனது மகனை கடத்திக்கொண்டு போனதாக அவர் மிக கவலையுடன் கூறியுள்ளார் .

அப்போது தான் அந்த தாய்க்கு அருகில் இருந்தவர் கூறியுள்ளார் ஐயோ அம்மா உங்கள் பிள்ளையை கடத்தின கும்பலின் தலைவன் தான் விக்கினேஸ்வரன் ஐயாக்கு பக்கத்தில நிக்கிற குள்ளமான , உடல் பருத்த நபர் ( eprlf தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ) என கூறியிருக்கிறார் .

அத்துடன் அவர்தான் எழுக தமிழ் நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளரென்றும் தெரிவித்துள்ளார் .

உடனே அந்த தாய்க்கு கடுங்கோபம் ஏற்பட்டு சுரேஸ் மீது தனது பாதணிகளை எறிந்து தாறுமாறாக வசைபாடத் தொடங்கிவிட்டார் . என்ர பிள்ளை மாதிரி நூற்றுக்கணக்கான பிள்ளைகளை கடத்தி கிட்னி திருடி விற்றுவிட்டு ரயர் போட்டு எரித்த ஈனப்பிறவிகளாகிய நீங்களெல்லாம் இப்ப மக்கள் பிரதிநிதிகளாடா என அந்த தாய் அழுகையுடன் சத்தம் போட்டு கூறியுள்ளார்.

அந்த தாய் இப்படி கூறியதும் சுரேஸ் நழுவி பின்னால் சென்று விட சுதாகரித்த மண்டையன் குழுவினர் அம்மாவை சமாளித்து வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டார்களாம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *