வவுனியாவில் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட ரௌடிகள்!

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் வாளுடன் புகுந்த மூன்று ரௌடிகளை மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவருக்கும், சில ரௌடிகளிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.
அதன் பின்னர் தம்முடன் முரண்பட்டவரின் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் சென்ற மூன்று ரௌடிகள், வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்தபோது அயவர்களினால் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

அதோடு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த ரௌடிகளை அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் 119 பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இந்நிலையில் தகவல் வழங்கப்பட்டு மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லாத நிலையில், கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

அத்துடன் ரௌடிகள் கொண்டு சென்ற வாளை பொது அமைப்புக்கள் தம்வசப்படுத்தியுள்ளனர்.

மேலும் இனிமேல் எவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் எனவும் கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் மூன்று ரௌடிகளும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த ரௌடிகள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *