புலிகளால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால்! இன்று…?

விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால் இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாகவும் சுயநிறைவு பொருளாதாரத்தை கட்டியமைத்த ஒரு தேசமாகவும் மிளிர்ந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வறணி, இடைக்குறிச்சி பகுதியில் இன்றையதினம் பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கான ஒரு சேவை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாம் இன்று சிறிய சிறிய விடயங்கள் தொடர்பாகவே கரிசனை கொள்கின்றோம் ஆனால் எமது இனத்தின் விடுதலைக்காக ஒரு சந்ததி போராடியிருக்கின்றனர்.

தமது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர், அந்த வரலாறுகளை நாம் மறந்து விடுகின்றோம் அத்துடன் நாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.

ஆனால் தற்போது எமது இனத்தினுடைய ஒற்றுமையை சிதைப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகவே அனைவரும் அவதானமாக இருந்து எமது இனத்தின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு ஒரு நிலையான அரசியல் தீர்வை எய்துவதற்காக ஓரணியில் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *