தெரிந்த பிசாசுக்கு என்ற ரீதியில் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்த முக்கியஸ்தர்

தெரிந்த பிசாசு என்ற ரீதியில், தாம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமுமான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வவுனியா விருந்தினர் விடுதியொன்றில், நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்‌சவின் கடந்த காலம் பற்றிய விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதில்லை. மஹிந்த ராஜபக்‌ச தனது பிரதிநிதியாக கோத்தாபயவை நியமித்து இருக்கிறார். இந்த நாட்டினுடைய முன்னேற்றங்களில், கோத்தாபய ஆற்றலுடன் செயற்படுவார் என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை நம்பச் சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி வருகிறது. பிசாசை விட பேயைக் கொண்டு வரலாமெனக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், மோசமான பேயை விட தெரிந்த பிசாசு பரவாயில்லை. இங்கு பேய்களும் பிசாசுகளும் தான் போட்டியிடப் போகின்றன. நல்லவரைத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. ஆகையால் தெரிந்த பிசாசு என்ற ரீதியில், கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கப் போகிறோம்.

சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதனை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் விரும்பாது, ஒரு நாட்டின் மீது வேறு நாடுகள் தலையிடுவதையோ அல்லது ஒரு நாட்டின் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதையோ எந்தவோர் அரசாங்கமும் அனுமதிக்காதெனவும், அவர் மேலும் கூறினார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *