யாழில் தொடரும் வாள்வெட்டு! இளைஞர்கள் இருவர் காயம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் கோயில் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிடாரி அம்மன் கோயிலை அண்மித்த பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பகுதியில் இளைஞர்கள் கூடிநின்றபோது, அங்கு வாள்களுடன் வந்த குழுவினர் இருவர் மீது மட்டும் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு பாசையூர் மற்றும் ஈச்சமோட்டைப் பகுதிகளிலும் ‘கெமி குழு’ என்ற வாள்வெட்டுக்குழுவினர் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், இளைஞர் ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியிருந்தனர்.

சமீப காலமாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *