யாழில் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் விபரத்தை சமர்ப்பிக்குமாறு ஆளுனர் கோரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருமாருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் https://np.gov.lk/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *