மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியர் சிவரூபன்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

கிளிநொச்சி, பளையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வைத்தியர் சிவரூபன் தெரிவித்ததாக கூறி வடபகுதியில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளமை ஆயுதங்களை மீட்பதற்காக என கூறப்படுகிறது.

இருந்தும் மட்டக்களப்பிற்கு சிவரூபன் அழைத்து செல்லப்பட்டுள்ளதால் விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் என்ற பெயரில் கிழக்கில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *