பலாலியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு செல்லத்தயாராகும் முதல் விமானம்

பலாலி, விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம் தனது விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.

இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. .

இதேவேளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட (FITS AIR) நிறுவனத்யின் 70 ஆசனங்களை உடைய ATR72 விமானம் காலை 9.10.மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *