பளை வைத்தியர் சிவரூபனிடம் இருந்து AK-47 துப்பாக்கி மீட்பு..! காட்சி படுத்திய பொலிஸ்..!

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரிடமிருந்து Ak 47 துப்பாக்கி1, மெகசின்2, 120 ரவைகள்,11கைக் குண்டுகள்,10Kg அதிதிறன் கொண்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தவாரம் பளை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *