முல்லைத்தீவில் வானில் சிக்கிய கேரள கஞ்சா

முல்லைதீவு, உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து நேற்று முன்னெடுத்த சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றில் இருந்த பொதியை சோதித்தபோது குறித்த கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தல்காரர்கள் கஞ்சா பொதியை கைவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைக்காக முல்லைதீவு பொலிஸ் சிறப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *