விக்னேஸ்வரன் – ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சென்றுள்ள ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இன்று சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஆறுமுகம் தொண்டமான் யாழ்ப்பாணம் சென்று விக்னேஸ்வரனை சந்தித்து அரசியல் கூட்டணி சம்பந்தமாக கலந்துரையாடியிருந்தார். எனினும் அதன்போது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *