கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ள யாழ் பல்கலைகழக மாணவர்கள்- காரணம் இதுதான்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாளை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், யாழ்பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை என்றும்,

இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகின்ற நிலையில், உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் , மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்தே நாளை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *