முதல்வருக்கு வழங்கிய வாகனத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கேட்ட அளுநர்.!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பயன்படுத்திய வாகனம் யாழ்.மாநகர முதல்வருக்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த வாகனத்தை திருப்பி ஒப்படைக்குமாறு முதல்வருக்கு பணிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வ­ரின் பாவ­னை­யி­லி­ருந்த வாக­னம் பழு­த­டைந்­தி­ருந்­தது. இது தொடர்­பில் வடக்கு ஆளு­ந­ரின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது. மாந­கர முதல்­வ­ ரின் பயன்­பாட்­டுக்கு புதிய வாக­னக் கொள்­வ­ன­வுக்­கும் அனு­மதி கோரப்­பட்­டி­ருந்­தது.

வடக்கு மாகாண சபை அதன் ஆட்­சிக் காலத்­தில் 45 மில்­லி­யன் ரூபா செல­வில், முத­ல­மைச்­சர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்­கான சொகுசு வாக­னங்­க­ளைக் கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது.

மாகா­ண­ ச­பை­யின் ஆட்­சிக் காலம் முடி­வ­டைந்த பின்­னர் அந்த வாக­னங்­கள் ஆளு­நர் செய­ல­கத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தன. முத­ல­மைச்­சர் பயன்­ப­டுத்­ திய வாக­னத்தை, ஆளு­நர் மாந­கர முதல்­வ­ருக்கு வழங்­கி­யி­ருந்­தார். இந்த விட­யம் அரச தலை­வர் செய­ல­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், மாந­கர முதல்­வ­ருக்கு வழங்­கிய வாக­னத்தை மீள ஒப்­ப­டைக்­கு­ மாறு ஆளு­நர் கோரி­யுள்­ளார். மாந­கர முதல்­வ­ரும் அதனை ஒப்­ப­டைக்க இணங்­கி­யுள்­ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *