வட மாகாண கல்வியமைச்சின் வினோதங்கள்!

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆளணி முகாமைத்துவக் குறைபாட்டின் மற்றுமொரு வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

கல்வி முகாமைத்துவ தகவல் அமைப்புக்கான இணையத்தளத்தின் தரவுகள் ஊடாக இது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் வட மாகாணத்தில் தற்போது 84 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

எனினும் இதில் 07 பாடசாலைகளுக்கு அதிபர்கள் தற்போதும் கடமையாற்றுவதாக சம்பளம் பெறுகின்றதாகவும், அப்படி சம்பளம் பெறுவர்களில் ஆசிரியர் தரத்தில் உள்ள 05 அதிபர்களும் உள்ளடங்குகின்றதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , ஆளணி முகாமைத்துவக் குறைபாட்டினை நிவர்த்திசெய்யாமல் , மூடப்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு ஆசிரியர் தரத்திலுள்ளவர்களையும் அதிபர்களாக நியமித்து அவர்களுக்கு அதிபர் தரத்திலுள்ள சலுகைகளை வழங்க வேண்டியதன் அவசியம் என்ன என பலரும் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *