கோத்தாவின் அறிவிப்பை அடுத்து வடக்கு தமிழர்கள் பெரும் ஆரவாரம்

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயவின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோத்தாவின் படம் தொங்கவிடப்பட்ட வாகனமொன்று சகிதம் சந்தி தோறும் வெடி கொழுத்தி கொண்டாடி வருகின்றது.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்பாய ராஜபக்ஸ என மஹிந்த ராஐபக்ஸவினால் அறிவிக்கபட்டதை அடுத்து மலையகத்திலும் அநேகமான பகுதிகளில் பொதுஐனபெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி பாற்சோறு சமைத்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர் .

அந்தவகையில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்பாய ராஜபக்ஸ என மஹிந்த ராஐபக்ஸவினால் அறிவிக்கபட்டதை அடுத்து மலையகத்திலும் அநேகமான பகுதிகளில் பொதுஐனபெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி பாற்சோறு சமைத்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர் .

அந்தவகையில் ஹற்றன் நுவரெலியா நாவலபிட்டி மற்றும் ஏனய பகுதிகளில் இந்த சந்தோசத்தினை பகர்ந்து கொண்டமை குறிப்பிடதக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *