பருத்தித்துறை நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் நாளை பகிரங்கமாக சாமத்தியவீடு கொண்டாடுகின்றார்!!

யாழ் பருத்தித்துறை நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை வழங்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வரும் நோர்வேயைச் சேர்ந்த நபர் நாளை தனது மகளின் பிறந்ததினத்தை யாழ் பூநாறிமடம் பகுதியில் உள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் பெரும் கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றார்.

குறித்த நபர் நோர்வேயிலிருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிடம் கப்பம் கோரியமை மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நீதிமன்றங்களை அவமதித்தமை, நீதிபதிகளை மிகக் கேவலமான வார்த்தைகளால் விமர்சித்தமை மற்றும் அசிங்கமான பாலியல்செயற்பாடுகள் போன்றவற்றுக்காக பல வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார். நீதிமன்ற அவமதிப்புக்காக இவருக்கு கடந்த புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் திறந்தபிடியாணை வழங்கியிருந்தது. வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இவ்வாறான நேரத்தில் இவன் நேற்று மாலை ஊடக அறிக்கை ஒன்றை சில ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தான். அந்த ஊடக அறிக்கையை பெரும்பாலான ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை. காரணம் அந்த ஊடக அறிக்கையில் மிகப் பொய்யான தகவல்களை வழங்கியிருந்தான்.

சேதுவின் ஊடக அறிக்கையை பார்த்து யாழ் குடாநாட்டு மக்கள் பெரும் விசனமடைந்துள்ளதுடன் அதனைப் பிரசுரித்த ஊடகத்தின் கேவலமான நிலையையும் அறிந்து கொண்டனர். யாழ்ப்பாண நீதித்துறையை 5 வயது குழந்தைக்கு ரொபி கொடுத்து ஏமாற்றுவது போன்று அவன் தனது ஊடக அறிக்கை மூலம் ஏமாற்ற முற்பட்டுள்ளதை பொதுமக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

அவனால் அனுப்பபட்ட ஊடக அறிக்கையையும் அவனது ஊடக அறிக்கையிலேயே அவன் விட்டுள்ள பெரும் குற்றங்களையும் 15 குற்றச்சாட்டுக்களாக நாம் தடித்த எழுத்துக்களால் அடையாளப்படுத்தியுள்ளோம்.

ஊத்தை சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் இவன்தான்

Image may contain: 1 person, standing

நடராஜா சேதுரூபன் ஆகிய நான் கடந்த 17ஆம் திகதி எனது மகளின் பூப்புனித நீராட்டு
விழாவுக்காகத் தனிப்பட்ட குடும்பத் தேவைக்காக இலங்கை வந்ததிருந்தேன்.

நான் கடந்த தேர்தலில் தமிழ் ஆயுத தேச விரோத குழுக்களுக்கு எதிராகவும், தேசிய அரசியல்
கட்சிக்கு ஆதரவாக யாழ். குடாநாட்டில் ஊடகவியலாளராக செயற்பட்டு இருந்தேன்.

குற்றச்சாட்டு 1 – நோர்வே பிரஜாவுரிமை பெற்று சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த சேதுரூபன் கடந்த தேர்தலில் எவ்வாறு ஊடகவியலாளராகவும் தேசிய கட்சிக்கு ஆதரவாகவும் செயற்படலாம்?? சுற்றுலா விசாவில் வந்த ஊத்தை சேது தேர்தல் குற்றங்கள் புரிந்தமைக்காக நெல்லியடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் வழங்கி ‘பி‘ அறிக்கை எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் அவன் அங்கும் சட்டத்தை ஏமாற்றி 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டான் என்பதும் அறியவருகின்றது.

அதன் பின்னர் நான் இலங்கையில் இல்லாத காலபகுதியில் அரசியல்வாதி ஒருவரால் செய்யப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னைக் கைது செய்து விசாரணை
செய்ய கிளிநொச்சி நீதிமன்றில் பிடிவிறாந்து எடுத்து வைத்திருந்தனர்.

நான் இன்றுவரை யாரிடமும் கப்பம் கேட்கவும் இல்லை ஆரும் எனக்கு கப்பம் இலங்கையில் தரவும்
இல்லை. யுத்தத்தில் பாதிக்கபட்ட சிறுவருக்கு பேனை, பென்சில், கொப்பி கொடுத்தமையை
கப்பமாக ஊடகங்கள் விமர்சிப்பது வேதனையை தருகிறது.

குற்றச்சாட்டு 2 – ஊத்தை சேது என்று அழைக்கப்படும் குறித்த நபர் newjaffna.net, newjaffna.lk என்ற இணையத்தளங்கள் மூலம் கப்பம் கோரியதை நாம் இங்கு தருகின்றோம். ஊத்தை சேது தான் கப்பம் கோரும் போது மிகவும் நுட்பமான முறையில் தான் அகப்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடனேயே கப்பம் பெற்று வந்துள்ளான். அதாவது ஒருவரைப் பற்றிய செய்தியைப் போட்டுவிட்டு அதை நீக்குவதற்காக ‘ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்ய வேண்டும் ‘ என கேட்டு பல லட்சங்களை தந்திரமாகப் பெற்றுவிட்டே செய்தியை அழிக்க முற்படுவான். அதற்கான ஆதாரங்கள் ஒரு சில இணைக்கப்பட்டுள்ளன.

No photo description available.No photo description available.

03.08.2019ஆம் திகதி சுமார் ஒரு கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எனது மகளின்
பூப்புனித நீராட்டு விழா நடைபெறுவதற்கு சற்று முன்னதாக என்னை நெல்லியடி பொலிஸ் கைது
செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பெற்று வைத்திருந்த
பிடிவிறாந்தின் அடிப்படையில் என்னை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்பு
காவலில் வைத்திருந்து 06.08.2019ஆம் திகதி பிணையில் விடுதலையானேன்.

நான் இலங்கையில் வாழாத காலத்தில் நெல்லியடியில் இருந்து இயக்கப்படும் பிரித்தானியக்
கடவுச்சீட்டு உடைய ஆரியகுணறாஸா செல்வா என்பவருடைய இணையத்தளத்தில் யாழ். மாட்டத்தில் கடமையாற்றிய ஒரு நீதவான் தொடர்பாக ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 3 – கிளிநொச்சி நீதிமன்றில் தான் 40 லட்சம் செலவு செய்து பூப்புனிதநீராட்டு விழா செய்ய இலங்கை வந்ததாக கூறியுள்ளான். தனது சொந்த முகப்புத்தகத்தில் தான் 5 மில்லியன் (50 லட்சம்) செலவு செய்து பூப்புனிதநீராட்டு விழா செய்ய முற்பட்டதாக கூறியுள்ளான். ஆனால் ஊடக அறிக்கையில் தான் ஒரு கோடி ரூபா செலவு செய்ததாக கூறியுள்ளான். இதிலிருந்தே எந்த அளவுக்கு நீதித்துறையையும் ஏனையவர்களையும் முட்டாளாக்க நினைக்கின்றான். அத்துடன் இவன் ஒரு கோடி ரூபாவை எவ்வாறு நோர்வேயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தான். ஒரு நபர் ஆகக் கூடுதலாக இலங்கைக்குள் நுழையும் போது 10 ஆயிரம் டொலர்களு்ககு மேல் பணம் கொண்டு வர முடியாது. அவ்வாறாயின் இவன் இந்த ஒரு கோடி ரூபாவை எங்கிருந்து பெற்றான்?? நீதிமன்றத்தில் இவன் இதற்கு விளக்கம் சொல்லுவானா?

தான் செய்யும் குற்றங்களை இன்னொருவரின் மீது மிகவும் இலகுவாக சுமத்துவதில் ஊத்தை சேது மிகவும் நுட்பமான செயற்பாடுகளை செய்வான். தனது பெயரை ஒத்த பல மின்னஞ்சல்கள் அல்லது முகப்புத்தகங்களை தானே இயக்கிக் கொண்டு அதன் மூலமே குற்றங்களைப் புரிவான். அவ்வாறு செய்தபின்னர் அவை தனது அடையாளங்கள் அல்ல என்று தப்பித்துக் கொள்வான். அல்லது இன்னொருவரை மிகவும் புத்திசாலித்தனமான மாட்டிவிடமுயல்வான். இது தொடர்பாகவும் ஆதாரங்கள் உள்ளன.

இவனுக்கு தனியே இலங்கையில் மட்டுமல்ல லண்டன், மலேசியா, சிங்கப்பூர், சுவிஸ் மற்றும் நோர்வேயிலும் கப்பம் பெற முயன்ற குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸ் முறைப்பாடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

No photo description available.

குறித்த செய்தி தொடர்பாக குறித்த நீதவான் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு இந்த
சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடராஜா சேதுரூபனாகிய நான் நோர்வேவில் இருந்து இலங்கை வந்த பின் சில சட்டத்தரணிகள்
(07.08.2019) நானே குறித்த இணையத்தை நடத்துவதாகவும் குறித்த இணையத்தில் வெளியான
செய்திக்கு நானே பொறுப்பு என்றும் போலியாக நீதிமன்றில் ஆள் மாறாட்டம் செய்து எனது
பெயருக்கு ஒரு கைது உத்தரவும், நான் வெளிநாடு செல்ல தடையும் நீதிமன்றின் ஊடாக
பெற்றுள்ளதாக நான் ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டேன்.

குற்றச்சாட்டு 4 – நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக ஊத்தை சேது அறிந்திருந்தால் எதற்காக ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றான். தன்னில் பிழை இல்லாவிடின் இது தொடர்பாக உடனடியான பொலிஸ் நிலையத்தில் ஆயராகி தனது தரப்பு நியாயங்களை விளக்கி அல்லது நீதிமன்றில் ஆயராகி தன்னில் பிழை இல்லை என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கலாம். அவ்வாறு விட்டுவிட்டு பொலிசார் தேடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான ஊடக அறிக்கையை எதற்காக ஊத்தை சேது வெளியிட்டான்.

இந்தக செயல் ஊடாக நீதிமன்றத்தையும், நீதி துறையினையும் ஒரு சிலர் தவறாக தமது அரசியல்
தேவைக்கு பயன்படுத்த முற்பட்டுள்ளமை புலனாகின்றது.

இலங்கை ஈ.பி.டி.பி தேசவிரோத கும்பல்களும், தமிழ் ஆயுத குழுக்களும் எனது பெயரில் பல
நூறு மோசடிகளை நான் இலங்கையில் இல்லாத காலத்தில் இலங்கைக்குள் அரங்கேற்றி வருகின்றனர்.

அதன் ஊடாக எனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தவும் நான் செய்யாத குற்றத்திற்கு என்னைத்
தண்டிப்பதுமே அவர்களுடைய இரகசிய திட்டமாகும்.

குற்றச்சாட்டு 5 – ஈ.பி.டி.பியினரோ அல்லது வேறு தரப்பினரோ இவ்வாறு தனக்கு எதிரான மோசடிகளை செய்துவருவதாக ஊத்தை சேது குறிப்பிடுகின்றான். அவ்வாறெனின் ஏன் அது தொடர்பாக ஊத்தை சேது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏன் அது தொடர்பாக இலங்கைக்கு வந்த போது பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. ஊத்தை சேதுவின் பெயரைப் பயன்படுத்தி ஆயுதக்குழுக்கள் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் உடனடியான அவர்கள் மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பர். ஆனால் ஊத்தை சேது செய்த செயல்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்தே செய்யப்பட்டதால் அவர்களால் குற்றவாளியை அடையாளம் காணமுடியாது போய்விட்டது என்பதே உண்மையாகும்.

எனது பெயரில் நடைபெற்ற குற்றச் செயல்கள் எனது பெயரில் போலி பேஸ்புக்கை உருவாக்கி இறந்துபோன பெண்களின் பெயரில் போலி பேஸ்புக்கை உருவாக்கி பாலியல் விடயங்களைக் கதைத்துவிட்டு கப்பம் பெறுவது போன்றும் கொடுப்பது
போன்றும் கதைத்துவிட்டு நோர்வேவில் இருக்கும் நடராஜா சேதுரூபன் இத்தகைய குற்றச் செயலில்
ஈடுபடுவதாகச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

குற்றச்சாட்டு 6 – ஊத்தை சேதுவின் பெயரில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் பெயர்கள் இறந்து போன பெண்களினுடையது என்பதை ஊத்தை சேது எப்படிக் கண்டுபிடித்தார்?? அவ்வாறான பெயர்களை தானே அறிந்து உருவாக்கியுள்ளார் என்பது வெளிப்படையாக உணரப்படுகின்றது.

எனது பெயரில் இலங்கை தொலைபேசி இலக்கத்தில் வைபர் இணைப்புகளை உருவாக்கி எனது படத்தைப்
போட்டு கப்பம் கேட்டு ஆக்களை மிரட்டுவது அதன் ஊடாக நோர்வே நடராஜா சேதுரூபனை சட்டச்
சிக்கலில் ஒரு சதியில் மாட்டிவிடுவது.

இணையங்கள் சமூக வலைத்தளங்களில் இலங்கையில் உள்ள தனிநபர்களைப் பற்றி அவதூறுகளைப்
பரப்பிவிட்டு அவற்றை நோர்வேவில் இருக்கும் நடராஜா சேதுரூபனை செய்வதாக போலி
வதந்திகளைப் பரப்பி வருகின்றன.

எனது பெயரை ஒத்த பெயரில் மின் அஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் குற்றச் செயல்களைச் செய்து
வருகின்றனர்.

குற்றச்சாட்டு 7 – நடராஜா சேதுரூபனின் பெயரில் தொழிற்படும் மின்னஞ்சலில் உள்ள அணைத்து தரவுகளும் மின்னஞ்சல் நிறுவனத்தால் 10 வருடத்துக்கு சேமிக்கப்பட்டே இருக்கும். அவர் அழித்தாலும் கூட அதனை மீட்டெடுக்க முடியும். ஆகவே அது தொடர்பில் அவரது குற்றச்சாட்டு போலியானது என்பதை நீதித்துறை அறிந்து கொள்ளும்.

எனது பெயரில் பல்வேறு குற்றச்செயல்களை சாகவச்சேரியில் உள்ள ஒருவரும், நெல்லியடியில்
உள்ள ஒருவரும் அவர்களின் சுவிஸ் முகவர் ஒருவரும் அவர்களின் பின்னால் இருந்து செயற்படும் மலேசிய, கனடா நபரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் தொடர்பாக பல நூறு தடவைகள் இலங்கை சட்டத்துறைக்கு முறையிட்டும் இன்றுவரை எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை அவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக உள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

குற்றச்சாட்டு 8 – ஊத்தை சேது என்பவர் நுாறு தடவையல்ல பல நுாறுதடவைகள் இலங்கையில் உள்ள முக்கியஸ்தர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் என்பவர்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புத்தரப்புக்கு மிக ஆபத்தானர்கள் என்ற ரீதியில் பெட்டிசங்களாக அனுப்பியுள்ளான். அவன் அனுப்பிய பெட்டிசங்களை விசாரித்து விசாரித்து அவை முற்று முழுதான பொய் என்பதை அறிந்து கொண்டு சேதுரூபன் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்கள்.

என்னால் பாதிக்கப்பட்டதாக எவராவது கருதினால் அவர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்.

குற்றச்சாட்டு 9 – எந்தவித தப்பும் செய்யாமல் உள்ளதாக தெரிவிக்கும் ஊத்தை சேது எதற்காக பகீரங்க மன்னிப்பு கேட்க முற்படுகின்றார்?

எனது பெயரில் நடைபெற்ற குற்றச்செயல்களில் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தயவு
செய்து என்னிடம் நேரடியாக எனது கை தொலைப்பேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு
கோருவதுடன் பகிரங்கமாக மனவேதனையும் அடைகிறேன்.

நோர்வேயில் நான் வாழும் காலத்தில் எனது கை தொலைப்பேசிக்கு உள்வரும் வெளி செல்லும்
அழைப்புகள் உட்பட அனைத்து டிஜிற்றல் தொடர்பாடல்களும் 6 வருடத்திற்கு ஒளி ஒலிப்பதிவு
செய்யப்பட்டு பதிவு செய்து வைக்கப்படுவதால் இலகுவில் இத்தகைய குற்றச்செயல்கள் நோர்வேயில் நடைபெறுவது இல்லை.

குற்றச்சாடு 10 – ஊத்தை சேது தனது தொலைபேசில் பதியும் அழைப்புக்கள் தொடர்பாக யாராவது கண்காணிக்கின்றார்களா? தானே பதிவு செய்து தானே அதை நிர்வாகம் செய்யும் போது அவற்றில் தனக்குப் பாதகமானவற்றை அவன் எப்போதே அழித்துவிட்டிருப்பான்.

எனது பெயரில் நடைபெற்ற தவறான செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள நீதித்துறையினருடனும்
பல்வேறு தரப்பினரிடமும் பகிரங்க மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

நான் சட்டத்துறையில் கல்வி கற்றுள்ளதுடன் நோர்வே நாட்டில் கடந்த 18 வருடமாக நோர்வே நியூஸ்
ஊடகவியலாளராக கடமையாற்றி வருவதுடன் அமெரிக்க வெளியுறவு செயலகத்தின் நேரடி
தொலைபேசி ஊடாக விசேட ஊடக மாநாடுகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு தமிழன் என்பதில்
பெருமை அடைகிறேன்.

குற்றச்சாட்டு 11 – இவ்வாறான ஒரு போலி விம்பத்தை ஏற்படுத்தி தன்னை மிகவும் ஜாம்பவனாக மக்கள் மத்தியில் காட்ட முற்படுகின்றான். இவன் கூறும் நோர்வே நியுஸ் என்ற ஆங்கில இணையத்தளம் 2007ம் ஆண்டே பதியப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இணையத்தளம் எவருமே அறியப்படாத ஒன்றாகும். அத்துடன் அமெரிக்க வெளியுறவு செயலகத்தில் நேரடி ஊடக மகாநாடுகளில் பங்கு கொள்வது ஊடகவியலாளனாக இருப்பவர்களுக்கு மிகச் சாதாரன ஒருவிடயமாகும். யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்கள் கூட பல ஊடகமகாநாடுகளில் இவ்வாறு தொழிற்பட்டுள்ளார்கள்.

Image may contain: text.

நான் ஒருபோதும் சட்டத்திற்கு எதிரான செயலை செய்ய விரும்பியவன் இல்லை. நான் ஒரு போதும்
சட்டத்திற்கு முராணான எந்த விதமான செயல்களிலும் உடந்தையாக இருந்தவனும் இல்லை.

குற்றச்சாட்டு 12 – சட்டத்துக்கு எதிரான செயலை விரும்பாதவன் என கூறும் ஊத்தை சேது ஏன் நீதிமன்ற பிடிவிறாந்து இரு்ககும் போது சரணடையாது ஒளிந்திருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றான்.

உலகத்தில் உள்ள 103 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதுடன் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட
மாநாடுகளில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளராக இருக்கும் எனக்கு எதிரான தீவிர அவதூறு
செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

குற்றச்சாட்டு 14 – அத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகாநாட்டுக்குச் சென்றுள்ளதாக ஊத்தை சேது கூறியுள்ளதை கணக்கிட்டு பார்க்கும் போது 13 வருடங்கள் 6 மாதங்கள் இவன் தொடர்ச்சியாக மகாநாட்டுக்குச் சென்று வந்துள்ளான் எனின் அந்த மகாநாடுகளுக்கு இவன் செல்வதற்கு பணம் கொடுத்தவர்கள் யார்? இவன் அவ்வாறு மகாநாட்டுக்கு தனது பணத்தில் சென்றிருந்தால் அவனுக்கு பணம் எவ்வாறு வந்தது? இவ்வாறு மகாநாட்டுக்கு சென்றிருந்தால் இவன் நோர்வேயில் வாழும் காலத்தில் ஒரு வேலைக்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படியாயின் இவனது குடும்பச் செலவுக்கு எவ்வாறு பணம் கிடைத்து வந்தது?? இவன் வேலை செய்த ஊடகம் எது? அந்த ஊடகத்தில் இவன் பெற்ற சம்பளம் தொடர்பாக இவன் நீதிமன்றத்தில் கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்படும். அப்போது இவன் மாட்டுப்பட்டு அதற்கும் இவன் குற்றவாளியாக கருதப்படுவான்.

பல்வேறு மறைகரங்களும், அரசியல் காரணங்களும் இவற்கு பின்னால் மறைந்துள்ளன.

தனிமனித உணர்வுகளால் மனம் நொந்த நிலையில் இருந்த எனது குடும்ப உறவினருக்கு எதிராக
அவதுறு பிரச்சாரம் ஊடகங்களில் பரப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய சட்டபடி, ஐரோப்பிய பிரஜா உரிமை உள்ளவர்களின் முகங்கள் ஊடகங்களில்
வெளியிடும்போது அவர்களின் தனிமனித சட்ட உரிமைகள் இலங்கை ஊடகங்களில் மீறப்பட்டுள்ளன.

என்னை அன்பாகவும் பண்பாகவும் நீதிமன்றத்திற்கு கூட்டி வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரின்
முகங்களை ஊடகங்களில் பகிரங்கபடுத்துவது சட்டத்திற்கு முரணானது என்பதனை ஊடகத்துறையினர்
உணர்ந்துகொள்ள வேண்டும். இதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயர் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

பொலிஸாரின் சேவைக்கும் இத்தகய ஊடாக செயற்பாடு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

என்னைக் கைது செய்த பொலிஸ்யும் என்னை பாரம் எடுத்த பயங்கரவாத தடுப்பு பொலிஸாரும் என்னைச்
சிறையில் அடைத்த பின் யாழ். சிறையிலும் நான் மிகவும் அன்பாகவும், பண்பாகவும்,
மதிப்பாகவும் நடத்தபட்டமையை இட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ச்சி அடைவதுடன் இலங்கை
பயங்கரவாத தடுப்பு பொலிஸ்க்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என
தெரிவித்துள்ளார்.

குற்றறச்சாட்டு 14 – ஒரு குற்றவாளியாக கருதப்பட்டுள்ள ஊத்தை சேது பொலிஸ் மற்றும் சிறை அதிகாரிகளை பாராட்டி தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் சொகுசான நடவடிக்கைகளை சிறைச்சாலையில் மேற்கொள்ளவும் இவ்வாறான புகழ்ச்சிகளை செய்கின்றான் என்பதை சட்டத்துறையினர் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நன்றி

த.சுமன்

சுயாதீன ஊடகவியலாளர்


ஊத்தை சேதுவின் குடும்பத்தினரும் மனைவியும் தந்தையும் ஊடகவியலாளருடன் சண்டித்தனம்.
குறிப்பு – நடராஜா சேதுரூபன் தொடர்பான தகவல்கள் யாவும் சுமன் என்ற ஊடகவியலாளரால் தரப்பட்ட தகவல்கள். இது தொடர்பாக ந.சேதுரூபனை தொடர்பு கொள்ள முற்பட்ட போது அவரது தொலைபேசி இலக்கத்திலிருந்து பதில் தரப்படவில்லை. அவர் தமது தரப்பு நியாயங்களை தரவிரும்பின் எமது இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *