நோர்வே சேதுவைத் தேடுகின்றது பொலிஸ்!! நாட்டைவிட்டு வெளியேறவும் தடை!!

இணையத்தளத்தில் நீதிபதிகளுக்கு எதிரா அவதுாறு பரப்பி நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்திய நடராஜா சேதுரூபனை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்ததுடன், இவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவதற்கு பிடியாணை பிறப்பித்தும் கட்டளை பிறப்பித்தார் பருத்திததுறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாஸ்கரன்.

2016ம் ஆண்டு பருத்தித்ததுறை நீதவானாக இருந்த நீதவான் பற்றியும், நீதவான் ஆனந்தராஜா பற்றியும் தனது இரண்டு இணையத்தளம் ஊடாக அவதுாறான செய்தி பரப்பி நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்திய நோர்வேப்பிரஜையான நடராஜா சேதுரூபனை ( அவரின் இலங்கை அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் என்பன இணைக்கப்பட்டு) கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறும், அவரை நாட்டை் விட்டு வெளியேற தடை விதிக்குமாறும் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உட்பட மூன்று சட்டத்தரணிகள் பருத்தித்துறை நீதிமன்றில் நேற்று புதன்கிழமை ஆஜராகி தமது வாதத்தை முன் வைத்தனர்.

அதாவது மேற்படி நோர்வே நாட்டு பிரஜை இலங்கை வந்திருந்த சமயம் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதி தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனவே அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகளால் கோரப்பட்டது. இதை ஆராய்ந்த நீதிவான் மேற்படி நபரைக் கெது செய்து நீதிமன்றில் முற்படுத்துவதற்கு பிடியாணை பிறப்பித்த நீதவான், அவரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்ததுடன் இது தொடர்பில் கட்டுநாயகா பொலிஸாருக்கும், இலங்கை குடியகல்வு குடியுரிமை திணைக்களத்திற்கும் கட்டளையை உடனடியாக அனுப்புமாறு கட்டளையிட்டார்.

குறித்த நபர் யார்? எப்படிப்பட்டன்?? newjaffna.lk, newjaffna.net என்ற இரு போலி இணையத்தளங்கள் ஊடக இவன் செய்த பாரிய குற்றங்கள் எவை? இவனுடன் தொடர்புபட்டுச் செயற்படுபவர்கள் யார்?? என்பன தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களுடன் நாம் தொடர்ச்சியாக பிரசுரிக்கவுள்ளோம்.

த. சுபாஸ்கரன்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *