மகனிற்காக சாந்தி எம்.பி செய்தது தவறான முன்னுதாரணம்! உண்மையை வெளிபடுத்திய சிவமோகன் எம்.பி

பல்கலைகழகத்தில் படிக்கும் தனது மகனிற்காக சாந்தி எம்.பி காணி பிடித்தது தவறான முன்னுதாரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளரினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் காடுகள் அழிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்தமை தொடர்பாக சிவமோகனிடம் கேட்கப்பட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

2016ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் காணியினை தனது மகனுக்கு பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முயற்சி எடுத்திருந்தார். அக்காணி தொடர்பாக அரசாங்க அதிபர் பணிமணையில் அனுமதிக்கப்பட்டு பட்டியலும் வந்திருந்தது.

மேலும் இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட முடியாது என தெரிவிக்கப்பட்டு அதனை நிராகரித்து இருந்தோம்.

அக்காணியானது நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய காணி. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதோடும் நாங்கள் பொதுமக்களிற்கு காணி இல்லை என்று சண்டை பிடித்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் அதனை நீண்ட கால குத்தகைக்கு தனது பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மகன் பெரும் தொழிலை செய்ய இருப்பதாக காரணம் காட்டி எடுக்க முனைந்தது தவறான முன்உதாரணம் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்களால் நேரடியாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான விசாரணையினை கட்சி முன்னெடுக்கும் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *