கொடிகாமத்தில் 31 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேக நபர் தப்பியோட்டம்
கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் இவற்றை கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கஞ்சா தொடர்பில் சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.