நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு சோதனைச் சாவடிகள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர்.

இந்த நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்மாநகர சபை பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

ஆலயத்திற்கு செல்லும் அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபாய் செலவில் 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் , மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *