நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழா தொடர்பில் மாநகர முதல்வரின் முக்கிய வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவரும் 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் உற்சவகால முன் ஆயத்தமாக வரும் 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த வீதித்தடையின் போது வாகன போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய உற்சவ காலத்தில் சாதாரண காவடிகள் பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதே நேரம் இம் முறை ஆலயத்துக்கு வரும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி நல்லூர்க்கந்தனின் உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற செய்யுமாறு யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *