கேப்பாபிலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் சடலமாக

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59 ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இராணுவத்தின் 16 ஆவது பொறியியல் பிரிவு முகாமில் சமையல்காரர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த நபர் தூக்கில் தொங்கியவாறு இருப்பதை அவதானித்த இராணுவத்தினர் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து அங்குசென்ற முள்ளியவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் கெக்கிராவ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய கருணாரட்ன எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *