யாழில் பெண்ணால் நையப்புடையப்பட்டவர் மருத்துவமனையில்

பெற்றோருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அயல் வீட்டாரை தட்டிக் கேட்ட நபர், பெண் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நடந்துள்ளது.

பெற்றோர் அயல் வீட்டாருடன் முரண்பாடு என மன்னாரில் வசிக்கும் மகனுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

மன்னாரில் இருந்த மகன் குப்பிளானுக்கு வந்து அயல் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.படுகாயமைடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *