யாழ்.கச்சேரி பகுதியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கச்சேரி, பெந்தேகொஸ்தே ஆலயத்திற்கு அருகாமையில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள வீதியினூடாக பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *