யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவரிடையே கைகலப்பு: 11 மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல்பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அனைவருமே சிங்கள மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *