யாழில் அத்தானுடன் அந்தரங்கம்!! பல லட்சங்களைச் சுருட்டிய மனைவியின் தங்கை!! மனைவி தற்கொலை முயற்சி!!

தனது அக்காவின் கணவருடன் அந்தரங்கத் தொடர்பு வைத்திருந்து பல லட்சங்களைச் சுருட்டிய இளம் குடும்பப் பெண்ணின் மோசடிச் செயலால் அப் பெண்ணின் அக்கா தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். உடுவில் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தாயாரான அரச உத்தியோகத்தரான குடும்பப் பெண்ணே தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவன் வியாபார நிலையம் ஒன்றை சுன்னாகம் பகுதியில் நடாத்தி வந்துள்ளார். இந் நிலையில் பலலட்சம் ரூபா சீட்டு பிடித்து வந்த கணவன் அச் சீட்டை எடுத்து மனைவிக்குத் தெரியாது திருமணமான மனைவியின் தங்கைக்கு கொடுத்துள்ளார். குறித்த தங்கையின் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். அத்தானிடம் குறித்த சீ்ட்டுப் பணத்தை வாங்கிய தங்கை அதை வைத்து வீடு ஒன்றைக் கட்டி முடித்து அண்மையில் புதுமனைப்புகுவிழாவும்  நடாத்தி முடித்துள்ளார்.

குறித்த புதுமனைப்புகுவிழாவும் தனது தங்கையின் கணவனின் பணத்திலேயே நடைபெற்றதாக மனைவி சந்தோசப்பட்ட  போது தனது கணவன் 20 லட்சம் ரூபா சீட்டுப் பணத்தை எடுத்து பல மாதங்களாகிவிட்டது என சீட்டுப் பிடித்த ஒருவர் மூலம் அறிந்துள்ளார் மனைவி. இது தொடர்பாக கணவனை கேட்ட போது கணவன் வியாபாரத்தில் சிக்கல் என கூறி மழுப்பியுள்ளார். கணவனின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் மனைவியே கணக்கு வழக்குகள் பார்த்து வந்ததால் கணவனின் பொய் எடுபடாமல் போய் உள்ளது. பணம் எங்கோ என்பது தொடர்பாக பல நாட்கள் கணவன் மனைவிக்கிடையே சச்சரவு நடந்துள்ளர். இது தொடர்பாக சீட்டு முதலாளியிடமும் மனைவி சென்று சண்டை பிடித்துள்ளார். கணவனைக் கண்காணித்த மனைவி தனது கணவனுக்கும் தனது திருமணமான தங்கைக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்கள் பல தடவை இடம்பெற்றுள்ளதை தொலைபேசியை ஆராய்ந்து பார்த்து அறிந்துள்ளார். இதன் பின்னர் கணவருடன் இரவிரவாக சண்டை நடந்தததாகவும் அதன் பின்னர் அதிகாலை மனைவி விசமருந்திய நிலையில் மயங்கி கிடந்த போது கணவர் அழுது குளறி மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஆபத்தான நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *