நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை கனடாவிற்கு ஏற்றிச்சென்ற கப்பலுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை, கனடாவிற்கு அழைத்து வந்த MV Sun Sea என்ற கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலை உடைப்பதற்கு பல மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்த கப்பல் இலங்கை அகதிகளுடன் கனடாவிற்கு சென்றது.

அந்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு யாரும் உரிமை கோராமல் இருந்தனர்.

இதன் காரணமாக கனேடிய எல்லை பாதுகாப்பு முகவருக்கு இந்த கப்பல் சொந்தமாக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கப்பலை உடைப்பதற்கு கனடா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி பெடரல் அரசாங்கம் அந்த கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.

அந்த கப்பல் கனேடிய சட்டங்களுக்குட்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உடைக்கப்படலாம், மொத்தமாக ஒதுக்கப்படலாம் அல்லது மறு சுழற்சிக்குள்ளாக்கப்படலாம்.

எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் குறித்த கப்பல் உடைக்கப்படும்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *