இதுவரை யாழில் இல்லாத நடைமுறை – பிரதமருக்காக செய்த யாழ் மாணவர்கள்! என்ன தெரியுமா?

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மாணவர் சிப்பாய் படையணியில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க பல்வேறு நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் கலந்து கொண்டார்.

அவரின் யாழ் விஜயத்தின் ஒரு அங்கமாக ஸ்கந்தவரோதயா பாடசாலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் கலந்து கொள்ளசென்ற பிரதமருக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்பு வழங்கப்பட்டு, பொன்னாடையும் அணிவித்து பிரதமருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இல்லாத நடமுறையாக தமிழ் மாணவர்களின் ஆயுதம் தாங்கிய அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது.

இவ் அணிவகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடேற்) அணியினர் வழங்கியிருந்தனர்.

சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு (கொமான்டிங்) அமைய தமிழ் மாணவர்கள் இவ் அணிவகுப்பு மரியாதையினை பிரதமருக்கு வழங்கியிருந்தார்கள்.

ஆரம்பத்தில் தமிழ் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆளாற் எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதும், கால போக்கில் அது மறக்கடிகப்பட்டிருந்தது.

இதேவேளை இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தரப்பினை சேர்ந்தவர்களும் ஆயுதம் தாங்கிய மாணவர்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையினை பிரதமருடன் இணைந்து ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *