முல்லைத்தீவில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர்1 சிப்பாய் பலி – 8 பேர் காயம்

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிப்பாய் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5 சிப்பாய்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *