யாழில் சா்ச்சையை கிளப்பும் 5G விவகாரம்! இராட்சத கோபுரங்களின் பின்னணியில் இருப்பது என்ன?

வட மாகாணத்தில் SMART LAMP POLE (ஸ்மார்ட் லாம் போல்) என்றழைக்கப்படும் 5G கோபுரங்கள் அமைக்கும் திட்டம் யாழில் மக்கள் மத்தியில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநகர எல்லைக்குள் 18 SMART LAMP POLE (ஸ்மார்ட் லாம் போல்) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் மாதிரி SMART LAMP POLE ஒன்று யாழ்.நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேரூந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.

இந்நிலையில் எவ்வித முன் ஏற்பாடும் இன்றி இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் 5G கோபுரங்கள் தொடர்பில் மக்கள் பல எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த SMART LAMP POLE திட்டத்தில் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல் என்பன எதிர்காலத்திலே வர இருக்கின்ற கிறீன் சிற்றி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்சத்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைக்காலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உட்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்தப்படவுள்ளமை தொடர்பிலும் மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5G என்றழைக்கப்படும் இராட்சத கோபுரங்களின் பின்னணியில் என்ன இருக்கின்றது? உண்மையில் நடப்பட்ட தூண்கள் 5G தொழினுட்பத்திற்கு உடையதா? SMART LAMP POLE தூண்கள் தனியார்களின் காணிகளில் நிர்மாணிக்கப்படுவதன் காரணம் என்ன? இவ்வாறு மக்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *