இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து 27.5 ஏக்கர் நிலப்பரப்பு விடுப்பு. ஓரளவு நல்ல நிலையில் வீடுகள்.

வலிகாமம் வடக்கு தையிட்டி தெற்கு ஜே-250 , தையிட்டி வடக்கு ஜே-249. உள்ளடக்கிய மக்களின் 27.5 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) முற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்புக்கான நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் காணி விடுவிப்பு பத்திரம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அளுநர் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கப்பட்டது.

இதேவேளை பலாலி வடக்கு அமெரிக்கன் மிஷன் பாடசாலையினை கட்டுவதற்கு ஒரு ஏக்கர் நிலப்பகுதியும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுளது.

இதேவேளை தையிட்டியில் விடுவிக்கப்பட்ட காணியில் கிட்டத்தட்ட 45 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியமையால் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் வீட்டுக்கு மார்பிள், பெயின்ட் பூசி பராமரித்துள்ளனர்.

இவ்வாறு தமது காணிகள், வீடுகள் இவ்வாறு விடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
.
இதேவேளை விடுவிக்கப்பட்ட இக் காணிகளுக்கு செல்லும் முன்பாக உள்ள மகளீ்ர் படையணி இராணவ முகாம் காணியும், இன்ஜினியரிங் படையனி முகாம் காணியும் விடுவிக்கப்படுமாயின் தையிட்டி தெற்கு, தையிட்டி வடக்கின் முழுமையான காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 3 people, people smiling, indoorImage may contain: one or more people, people standing, tree and outdoorImage may contain: tree, outdoor and natureImage may contain: outdoorImage may contain: indoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people, house, sky, tree, outdoor and natureImage may contain: tree and outdoorImage may contain: tree, sky and outdoorImage may contain: one or more people, sky, house, tree, outdoor and natureImage may contain: plant and outdoorImage may contain: sky, cloud, house, tree, outdoor and natureNo photo description available.Image may contain: indoorImage may contain: house, sky and outdoorImage may contain: plant and outdoorImage may contain: tree, plant, sky and outdoorImage may contain: plant and outdoorImage may contain: house, sky, tree, plant, outdoor and natureImage may contain: tree, outdoor and nature


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *