யாழ் பருத்தித்துறை அரச பஸ் சாரதி, நடத்துனர்களின் லீலைகள்!! பெண்களைக் கண்டவுடன் படும்பாடு!!

பருத்தித்துறை – யாழ் சாலையில் வடபிராந்திய போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான அரச பஸ்களால் பயணிகள் பெரும் துன்பப்படுவதாகத் தெரியவருகின்றது. யாழில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வடமராட்சியிலிருந்து வரும் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பருவகால ரிக்கட்டுக்களை பெற்றே பயணம் செய்கின்றார்கள். இவர்கள் இதனால் தனியார் பஸ்களில் பயணம் செய்வதில்லை. இவ்வாறன நிலையில் குறித்த பேரூந்துகளின் சாரதிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிற்கும் பருவகால ரிக்கட் எடுப்பவர்களை சிலவேளைகளில் ஏற்றிச் செல்லவதில்லை என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஸ் தரிப்பிடத்தை விட்டு நிற்கும் பெண் பயணிகளை ஏற்றுவதற்கே இவ்வாறான பஸ்சாரதிகளும் நடத்துனர்களும் முண்டியடிப்பதாகவும் பஸ்சில் பயணம் செய்யும் அலுவலர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல தடவைகள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *