கூர்கா திரைவிமர்சனம்

கூர்கா என்ற சொல்லை நாம் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். காவலாளியாக இரவு நேரத்தில் உலாவந்து கொண்டுருக்கும் கூர்க்கர் இன மக்கள் இன்னும் பாரம்பரியமான அதே தொழிலை தான் செய்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது. சரி., இந்த கூர்கா எப்படிப்பட்டவர் என தெரிந்துகொள்ளலாம்.
கதைக்களம்

கதைப்படி யோகி பாபு கூர்கா வம்சம்த்தை சேர்ந்தவர். இவருக்கு போலிஸ் ஆக வேண்டும் ஆசை. இதற்காக என்னென்னவோ செய்கிறார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை. வேண்டா வெறுப்பாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக பெண் அமெரிக்க தூதரை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்னர் என்ன? ஒரே ட்ரீம்ஸ் தான்.

ஒரு நாள் தீவிரவாத செயலில் ஒரு கும்பல் ஈடுபட பெரிய ஷாப்பிங் மாலில் இவர் சிக்கிக்கொள்கிறார். அங்கிருந்த மக்களும் மாட்டிகொண்டு தவிக்கிறார்கள். அங்கு வரும் யோகிபாபுவும் இதை அறிந்துகொண்டார்.

தான் உயிராக நினைக்கு அந்த பெண்ணை காப்பாற்ற இவர் களத்தில் இறங்குகிறார். அந்த கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன, அந்த பெண் தூதருக்கு என்ன தொடர்பு, மக்கள் காப்பாற்றப்பட்டார்களா, யோகி பாபு என்ன செய்தார் என்பதே இந்த கூர்க்கா.
படத்தை பற்றிய அலசல்

இரவில் விசல் சத்தம் கேட்காமல் நாம் இருந்திருக்க மாட்டோம். நாம் நிம்மதியாக உறங்க தங்கள் தூக்கத்தை தொலைக்கும் கூர்க்கா மக்களை சமூகத்தில் நாம் மனிதராக மதிப்பதில்லை. கூர்க்கர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ராணுவ வீரர்களுக்கு இணையாக பலம் பெற்றவர்கள். நாட்டின் பல பகுதிகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் தன் பாரம்பரிய தொழிலை செய்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் டிப்ஸ் வாங்க வரும் சாதாரண மக்கள் என நம்மில் பலரும் நினைக்கிறோம்.

இந்நிலையில் கூர்காவாக வரும் யோகி பாபு ஒரு சீரியஸ் ஆன நபர் போல இல்லாமல் வழக்கமான தன்னுடைய காமெடி, கவுண்டர், பாடி லாங்குவேஜ் என கலந்து அந்த கூர்க்காவாக மாறியுள்ளார். ஒரு சாதாரண கூர்க்காவாலும் சமூகத்திற்கு நல்ல காவலாளியாக இருக்க முடியும், அவர்கள் மதிக்கப்படவேண்டும் என அவர் படத்தில் சொல்லியிருக்கிறார்.

அவரின் மனம் ஈர்த்த இளம் பெண் அமெரிக்க தூதரை யோகி பாபு காதலிக்கு விதம் எண்டெர்டெயின்மெண்ட் ஆன ஸ்டைல். பிறகு என்ன ஒரே காதல் கனவு தான்.

சினிமாவில் ஒரு நேரத்தில் காமெடியில் முக்கிய நடிகராக இருந்த சார்லியை நீண்ட நாட்கள் கழித்து படத்தில் பார்த்தது மகிழ்ச்சி யோகிபாபுவுக்கு நண்பராக வரும் இவரும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளை மக்களின் கவனம் ஈர்க்கிறது. லவ் காட்சிகள் குறைவு ஆனாலும் சிரிப்பும் தான். படத்தில் அவர்கள் தவிர ஆடுகளம் நரேன், மனோ பாலா, தேவ தர்ஷினி என வேறு சிலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் சாம் ஆண்டன் ஏற்கனவே டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு என கவனம் ஈர்த்த படங்களை இயக்கியவர் யோகிபாபுவை ஒரு வித்தியாசமான ஹீரோவாக காட்டியிருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் விறுவிறுப்பு. தியேட்டரில் படம் பார்க்கவந்தவர்களை சிரிக்கவைத்துவிடுகிறது.

அஜித், விஜய், விஷால், சிம்பு, தனுஷ், ரஜினி என பலரின் நடிகர்களின் முக்கிய விசயங்களை பெர்ஃபார்மன்ஸ்ல் கொண்டு வந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கிறார்.

மேலும் அரசியல் சர்ச்சை, பாலியல் சர்ச்சைக்குரிய முக்கிய நபர்கள், டிவி சானல் என பலரையும் உள்ளே இழுத்து விட்டு ஆட்டம் காட்டுகிறார்கள்.

படத்தில் வில்லனாக மாறும் ஒரு ராணு வீரரின் பின்னாலும் ஒரு முக்கிய விசயத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களையும் விட்டுக்கொடுக்கவில்லை.
கிளாப்ஸ்

தர்ம பிரபுவில் விட்டதை கூர்க்காவில் பிடித்துவிட்டார்.

காமெடி, கவுண்டர் வசனங்கள் சிரிப்புக்கு கியாரண்டி.

கூர்க்கா, ராணுவ மக்கள் பற்றி நல்ல சோசியல் மெசேஜ்.
பல்பஸ்

முதல் பாதி மெதுவாக நகர்வது போல தெரிந்தாலும் இரண்டாம் பாதி வேகமாக நகர்ந்து விடுகிறது.

மொத்தத்தில் கூர்கா படம் மக்களின் மனம் கவரும். கூர்க்கா காவலாளிகள் மீதான அன்பு பெருகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *