இன்று பல ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது..! ஆளுநர் அதிரடி..

இன்றைய தினம் மக்களுடைய பல ஏக்கர் காணி மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மக்களுடைய காணிகள் மக்களிடமே சென்றடையவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர், உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ள அதேவேளை 100 ஏக்கர் காணிவரை விடுவிக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் தனியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை.

அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்.

அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். பூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *