புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுனியா – புதூர், புளியங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மாலை 3.30 மணியளவில் சென்ற கடுகதி புகையிரதம் புதூர் ஆலயப்பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை பாதுகாப்பான கடவையாக மாற்றி அமைத்துத்தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை எனவும் இதனால் அப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *