யாழில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அரசாங்கத்துடனே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட தமிழ் விவசாயிகளின் விவசாயபூமி, ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நஷ்டயீடு இன்னும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் மேற்கண்டவா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.