வவுனியா வேப்பங்குளம் மதுபானசாலையில் குழு மோதல் : இருவர் கைது

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இன்றிரவு 9.20 மணியளவில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக பொலிஸாரினால் மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது.

வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள மதுபானசாலையில் சில நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முறன்பாடு மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதலில் ஈடுபட்டிருந்த நபர்கள் மதுபானசாலைக்குள் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன் வெளியிலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலைமை காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் அவ்விடத்தில் நிலவிய பதட்டத்தினை நீங்கியதுடன் மதுபானசாலையினை மூடுமாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தமையினையடுத்து மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது.

அத்துடன் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

குறித்த மதுபானசாலையில் தினசரி இவ்வாறான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *