வவுனியாவில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக வவுனியாவில் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா – கண்டி வீதியிலுள்ள பௌத்த விகாரையில் இருந்து இன்று காலை சிவில் பாதுகாப்புப்படைப் பிரிவின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

குடி குடியைக் கெடுக்கும், பாலகரை குடி என்கின்ற பாதாளத்தில் தள்ளாதே, போதை அற்ற தேசத்தில் வாழ்வோம், போதை பொருளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம், மதுவிலிருந்து வாலிபரைப் பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் எடுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என 500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *