பணம் வேண்டும்… பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்!

குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது.

அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர்.

பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். ஆறு மாத குழந்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நீதி திட்டம் அமைப்பு கூறுகிறது.

என்ன நடக்கிறது?

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் என்ற அளவில் இருந்தது. கடந்தாண்டு இது 18 மில்லியனாக உயர்ந்துள்ளது என்கிறது காணாமல் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மையம்.

பிலிப்பைன்ஸில்தான் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. தன் தாயாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறுகிறார் ஜோனா எனும் பதின்பருவ வயது பெண். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

“ஒரு முறை நானும் என் நண்பரும் ஒன்றாக குளித்து, ஆடை அணிந்தோம். அந்த அறையில் என் அம்மாவும் இருந்தார். அவர் அதனை படம் எடுத்தார்” என்கிறார். “எதற்காக படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘ஒன்றுமில்லை… சும்மாதான்’ என்று அவர் கூறினார்” என்கிறார் ஜோனா. ஆனால், அந்த படங்கள் இணையத்தில் விற்கப்பட்டது. பின்பு, போலீஸ் மூலம் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன.

எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டன் தேசிய குற்றவியல் மையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணி செய்த சர்வதேச நீதி மையம் என்ற அமைப்பு இதுவரை 500 பிலிப்பைன்ஸ் குழந்தைகளை மீட்டுள்ளது. 69 சதவீத வழக்குகளில் குழந்தைகள் பெற்றோர் அல்லது உறவினர்களாலேயே துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த அமைப்பு.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *