விஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம்! தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாண்டி, கவின், மதுமிதா, அபிராமி, ஷெரின், ரேஷ்மா என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்களோடு மோகன் வைத்யா, சரவணன், வனிதா, பாத்திமா, சேரன் என சீனியர் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்களுடன் ஈழத்தமிழர்களான முகென் ராவ், லொஸ்லியா, தர்ஷன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்ததுமே மீம்ஸ் வெளியாக தொடங்கிவிட்டது. ஆர்மிக்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் கூடிவிட்டனர்.

இதில் தற்போது இலங்கையில் இருந்து வந்திருக்கும் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களை உறுப்பினர்களாக கொண்ட டிவிட்டர் பக்கத்தினர் பதிவிட்டு வருகின்றனர். கடைசி வரை இந்த ஆதரவு இருக்குமா, அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *