“வவுனியாவில் பாடசாலை வளாகத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்”

வவுனியா – புதியவேலன் சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வளாகத்துக்குள் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளன.

புதியவேலன் சின்னக்குளம் கிராமம் காட்டுப்பகுதியை அண்டிய கிராமம். இந்த கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடிமனை பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களையும், பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அந்தவகையின் நேற்று இரவு குடிமனை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் புதிய வேலன்சின்னக்குளம் ஆனந்தகுமார சுவாமி வித்தியாலய வேலியை அறுத்து கொண்டு புகுந்து வாழை, மா, பலா, உட்பட பல பயன்தரும் மரங்களை பிடுங்கி சேதமேற்படுத்தியுள்ளன.

குறித்த பாடசாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றில் மாணவர்கள் கைப்பம்பியால் நீரெடுத்து மிக கஸ்டப்பட்டு பராமரித்து வந்த பயன்தரும் மரங்களை தொடர்ந்தும் யானைகள் சேதப்படுத்தி வருவதால் பாடசாலை சமூகம் விரக்தி நிலையில் இருப்பதாக பாடசாலை ஆசிரியரொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குடிமனை பகுதிகளிலும் விவசாயிகளின் பயிர்களையும் அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றது.

இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே குறித்த கிராமத்தை சுற்றி யானைவேலி அமைத்து தரும்படி புதியவேலன் சின்னக்குளம் கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *