யாழில் சப்பாத்திற்குள் விஷப்பாம்பு! தலைதெறிக்க ஓடிய நபர்

யாழில் சப்பாத்துக்குள் பதுங்கியிருந்த விஷப் பாம்பு ஒன்றால் இன்று காலை வீடொன்றில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியிலேயே இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,தனியார் கம்பனியொன்றில் தொழில்புரியும் குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று காலை வேலைக்குச் செல்வதற்காக வெளியில் இருந்த தனது இரண்டு சப்பாத்துக்களையும் எடுத்துள்ளார்.

பின்னர் குறித்த சப்பாத்தினுள்ளிருந்த கால்மேஸ் எனப்படும் சொக்ஸை எடுத்து உதறிவிட்டு அணிந்துள்ளார்.

பின்னர் சப்பாத்தை அணிவதற்காக எடுத்தபோது அதனுள்ளிருந்து சிறிய பாம்பு ஒன்று எட்டிப்பார்த்துள்ளது.

இதனால் பதறியடித்த குறித்த நபர் சப்பாத்தை தூர எறிந்துள்ளார். அதன்போது அதனுள்ளிருந்து புடையன் இனத்தைச் சேர்ந்த பாம்பு ஒன்று வெளிப்பட்டு ஓடியது.

எவ்வாறாயினும் கால்மேஸை அணிந்தபின் சப்பாத்தை அப்படியே அணிந்திருந்தால் குறித்த பாம்பு தன்னைக் கொத்தியிருக்கும் என படபடப்புடன் கூறினார் அவர்.

இதேவேளை வீடுகளில் சப்பாத்தைக் கழற்றிவிடும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென்றும் இரவில் சஞ்சரிக்கும் விஷப் பாம்புகள் இதுபோன்ற மறைவான பகுதிகளில் பதுங்கியிருக்க வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாக பலராலும் எச்சரிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *