“யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு”

வட மாகாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ். பாலசந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பொன்று வட மாகாண இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் குழந்தை ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *