“முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக இதுவரை 2290 மில்லியன் ரூபா நிதி”

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக இதுவரை சுமார் 2290 மில்லியன் ரூபா நிதி கிடைக்க பெற்று இதுவரை 551.209 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையினாலும், யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இவ்வாண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்காக 2290.423 மில்லியன் ரூபா நிதி கிடைக்க பெற்று இதுவரை 551.209 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மீள் குடியேற்ற அமைச்சு கிராம சக்தி வேலைத் திட்டம் கம்பரலிய தேசிய உணவு உற்பத்தி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட 10 வரையான நிதி மூலங்கள் ஊடாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *